search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் போட்டி"

    அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், குல்பதின் நயீப்பின் பேட்டிங், பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #AFGvIRE #GulbadinNaib
    ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை ஆப்கானிஸ்தான் 2- 0 என கைப்பற்றியது. 

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று டேராடூனில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிர்லிங் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். அரை சதமடித்த அவர் 89 ரன்னில் அவுட்டானார். மற்றொரு வீரர் ஜார்ஜ் டாக்ரெல் 37 ரன்னில் வெளியேறினார். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால், அயர்லாந்து அணி 49.2 ஓவரில் 161 ரன்கள் எடுத்தது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் தவ்லத் சட்ரான், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், குல்பதின் நயீப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. மொகமது ஷசாத் 43 ரன்னிலும், ஹஸ்ரத்துல்லா ஷாஷை 25 ரன்னிலும், ரஹ்மத் ஷா 22 ரன்னிலும், குல்புதின் நயீப் 46 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 41.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. #AFGvIRE #GulbadinNaib
    விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 போட்டியில், பரபரப்பான கட்டத்தில் இந்தியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா. #INDvAUS
    இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர்.

    ரோகித் சர்மா 5 ரன்னிலும், விராட் கோலி 24 ரன்னிலும், ரிஷப் பந்த் 3 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடிய லோகேஷ் ராகுல் அரை சதமடித்து அவுட்டானார்.

    மகேந்திர சிங் தோனி ஓரளவு தாக்குப்பிடித்து 29 ரன்னுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்துள்ளது.

    ஆஸ்திரேலியா சார்பில் நாதன் கவுல்டர் நைல் 3 விக்கெட் வீழ்த்தினார்.



    இதையடுத்து, 127 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா களமிறங்கியது. அந்த அணி 5 ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது.

    அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல், தொடக்க ஆட்டக்காரரான ஆர்கி ஷாட்டுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இருவரும் 84 ரன்கள் சேர்த்தனர். ஆர்கி ஷாட் 37 ரன்னில் அவுட்டானார். கிளென் மேக்ஸ்வெல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் வெளியேறினார்.

    ஆஸ்திரேலிய அணி இடையில் விக்கெட்டுகளை இழந்து திணறினாலும், பரபரப்பான கட்டத்தில் பொறுப்புடன் ஆடி வெற்றி பெற்றது.

    அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து, டி20 தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. #INDvAUS
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், லோகேஷ் ராகுலின் அரை சதத்தால் இந்திய அணி 127 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. #INDvAUS
    இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர்.

    ரோகித் சர்மா 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து கேப்டன் விராட் கோலி இறங்கினார். ராகுலுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இருவரும் இணைந்து 55 ரன்கள் சேர்த்தனர். அணியின் எண்ணிக்கை 69 ஆக இருக்கும் போது விராட் கோலி 24 ரன்னில் வெளியேறினார்.

    அவரை தொடர்ந்து இறங்கிய ரிஷப் பந்த் 3 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனால் முதல் 10 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய லோகேஷ் ராகுல் அரை சதமடித்து அவுட்டானார். அடுத்து வந்த வீரர்களில் தோனி மட்டும் தாக்குப்பிடித்தார். அவர் 29 ரன்னுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 127 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. #INDvAUS
    இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களமிறங்கி உள்ளனர். #INDvAUS
    இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் விளையாடி வருகின்றனர். #INDvAUS
    சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா. ரோகித் சர்மாவின் சதம் வீணானது. #AUSvIND #RohitSharma #JhyeRichardson
    சிட்னி:

    இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    நிர்ணயித்த 50 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேண்ட்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 73 ரன்களும், கவாஜா 81 பந்துகளில் 59 ரன்களும், மார்ஸ் 70 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தனர்.

    இந்தியா அணியில் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

    தவான் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 3 ரன்னில் வெளியேறினார். பின்னர் வந்த அம்பதி ராயுடு ரன் ஏதும் எடுக்கவில்லை.



    அடுத்து ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார் டோனி. இருவரும் நிதானமாக விளையாடினர். அரை சதமடித்த டோனி 51 ரன்னில் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரோகித் சர்மா தனி ஒருவனாக போராடி சதமடித்தார். அவரது போராட்டம் வீணானது. அவர் 129 பந்துகளில் 6 சிக்சர், 10 பவுண்டரியுடன் 133 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து இறுதிக்கட்ட விக்கெட்டுகளும் விரைவில் விழுந்தன.

    இறுதியில், இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 254 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

    ஆஸ்திரேலியா சார்பில் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டும், ஜேசன் பெஹர்ண்டாப், ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். #AUSvIND #RohitSharma #JhyeRichardson
    ×